செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயாரிக்க ரூ.23 கோடி ‘ஆவின்’ நெய் விற்பனை

திருப்பதி, பிப்.12

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயாரிப்புக்காக 23 கோடி மதிப்பிலான ‘ஆவின்’ நெய் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ‘இரண்டாம் வெண்மை புரட்சியை’ முனைப்புடன் செயல்படுத்திவரும் ஆவின் நிறுவனம், தற்போது சராசரியாக தினசரி 32 லட்ச லிட்டர் கிராமபுற பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து தினசரி 23.5 லட்சம் லிட்டர் விற்பனை செய்து வருகிறது. மீதமுள்ள பாலை நுகர்வோருக்கு தேவைப்படும் பால் உபபொருட்களாக தயாரித்து நெய், பால் பவுடர், வெண்ணெய், தயிர், மோர், லஸ்சி, இனிப்பு வகைகள், பாதாம் மிக்ஸ் பவுடர், நறுமணப்பால் ஆறு மாதம் வரை கெடாத மில்க் (UHT Milk) மற்றும் ஐஸ்கீரிம் வகைகளை தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. மேலும் வெளி மாநில ஆவின் கிளைகளிலும், அரசு மற்றும் அரசு சார் நிறுவன டெண்டர்களிலும் பங்கு பெற்று நெய், வெண்ணெய் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.

மேலும் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மக்களுக்கு பயன்படும் நோக்கிலும், நமது வெளிநாட்டு வணிகத்தை அதிகரிக்கும் பொருட்டும், 6 மாதம் வரை கெடாத, உயர் வெப்பநிலையில் தயாரிக்கப்பட்ட பால் பால்பாக்கெட்டு மற்றும் நெய், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைத் தவிர ஐக்கிய அரபு நாடுகள் மற்றம் இலங்கை வெளிநாடுகளிலும் ஆவின் பால்பொருட்களின் விற்பனையைத் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு ‘ஆவின்’ நெய், விற்பனை செய்யப்பட உள்ளது. மக்களின் நன்மதிப்பைப்பெற்று பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையில் தமிழகத்தில் முன்னோடியாக விளங்கும் ‘ஆவின்’ நிறுவனம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்வதற்காக 7,24,000 கிலோ நெய் ரூ.23 கோடி மதிப்பிலான நெய் கொள்முதல் செய்வதற்காக திருப்பதி தேவஸ்தானம் அக்டோபர் 2018 ல் கோரிய டெண்டரில் ‘ஆவின்’ சேலம் ஈரோடு ஒன்றியங்கள் மூலமாக கலந்து கொண்டு, நெய்யின் தரம் மற்றும் விலையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2003 04 ஆம் ஆண்டிற்கு பிறகு 15 வருடங்களுக்குப்பின்னர், தற்போது ‘ஆவின்’ நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்க ஒப்புதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நுகர்வோர் தங்கள் புகார் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்க 24 மணி நேரம் நுகர்வோர் நலன் மற்றும் சேவைப் பிரிவு கட்டணமில்லா தொலைபேசி 1800 425 3300 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது aavincomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *