செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் டீக்கடைகளுக்கு நேர கட்டுப்பாடு கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தகவல்

திருநெல்வேலி, ஜூலை.1–

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் உள்ள டீ கடைகளுக்கு நேர கட்டுப்பாடு விதித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வின் போது பல பகுதிகளில் டீ கடைகளில் பொதுமக்கள் அவசியமின்றி அதிகளவில் கூடுவது கண்டறியப்பட்டது. பொது மக்களின் இத்தகைய செயலால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிகழ சாத்தியக்கூறுகள் இருப்பதால் இனிவரும் காலங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம் திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் தினமும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை 3 மணி நேரம் மட்டுமே டீ கடைகள் செயல்பட அனுமதித்து ஆணையிடப்படுகிறது. இந்த நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

திருநெல்வேலி டவுண் நயினார் குளத்தில் இயங்கி மொத்த காய்கறி வியாபார சந்தை தற்போது வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. மேற்படி காய்கறி சந்தையினை பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு மாற்றம் செய்து ஆணையிடப்படுகிறது. கொரானோ வைரஸ் தொற்று பரவுவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்படும் நடைமுறைகளுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *