செய்திகள்

தாய்லாந்தில் மதுபான விடுதியில் பயங்கர தீ விபத்து: 13 பேர் பலி

பாங்காக், ஆக. 5–

தாய்லாந்தின் கிழக்கு மாகாணமான சோன்புரியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி என்ற இரவு நேர மதுபான விடுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கூடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் 4 பெண்கள், 9 ஆண்கள் உட்பட 13 பேர் உடல் கருகி பலியானார்கள். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 40 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்திற்கான காரணமாக குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தீ விபத்து ஏற்பட்ட காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதில், பலர் தங்கள் உடல்களில் தீக்காயங்களுடன் அலறியடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.