சென்னை, ஜன. 5–
தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்திலுள்ள புது தின்சுகியா ரெயில் நிலையம் வரை செல்லும் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டிலும், மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து வட மாநிலங்களுக்கு மகரசங்கராந்தி பண்டிகைக்கு செல்லும் வட மாநில மக்களுக்கு வசதியாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இன்று முன்பதிவு
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலம் புது தின்சுகியா ரயில் நிலையம் வரை ஜனவரி 8 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தாம்பரத்திலிருந்து ஜனவரி 8 ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் தின்சுகியாவுக்கு ஜனவரி 10 இரவு 7.35 மணிக்கு சென்றடையும். அதேபோல், புது தின்சுகியாவில் இருந்து ஜனவரி 11 ந்தேதி இரவு 8.20 மணிக்கு கிளம்பும் ரயில் ஜனவரி 14 ந்தேதி காலை 5.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று அதிகாலை முதல் தொடங்கியுள்ளது.