செய்திகள்

தாகூர் என்ஜினியரிங் கல்லூரியில் மின்சார தகவல் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் சர்வதேச கருத்தரங்கு

தாம்பரம், மார்ச். 12 –

சென்னையை அடுத்த வண்டலூர், ரத்தினமங்கலம் தாகூர் பொறியியல் கல்லூரியில் மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் கணினி குறித்த இரண்டு நாள் சர்வதேச தொழில்நுட்ப மாநாடு கல்லூரி வளாகத்தில், தாகூர் கல்வி குழுமங்களின் தலைவர் எம். மாலா தலைமையில் நடைபெற்றது.

சென்னையில் இயங்கி வரும் தைவான் நாட்டிற்கான உலக வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் மேலாளர் கிறிஸ்டியன் லி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாநாட்டு மலரை வெளியிட்டார்.

இந்த சர்வதேச தொழில்நுட்ப மாநாட்டில் 300–க்கும் மேற்பட்ட மாணவர்களும், 400–க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களும் தங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்தனர். சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்குத் தாகூர் கல்வி குழுத்தின் சார்பில் தாகூர் கல்வி குழுமங்களின் தலைவர் எம்.மாலா பரிசு மேற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

தாகூர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் எஸ்.லட்சுமி அனைவரையும் வரவேற்று பேசுகையில்,

இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு பொறியியல் துறையில் உலக அளவில் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து மாணவர்கள் உடனுக்குடன் தெரிந்து கொண்டு தங்களை புதுப்பித்துக் கொள்வதற்காக அந்தந்த துறை சார்ந்த சிறப்பு வல்லுனர்களையும், பேராசிரியர்களையும் கொண்டு இதுபோன்ற மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் நமது கல்லூரி ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றது, இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையின் உதவி பேராசிரியர் பி. சிட்டி பாபு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவர்களிடம் உரையாடினார்.

குரோம்பேட்டை எம்.ஐ.டி.யின் பேராசிரியர் ஜி.அனிதா, சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீர் பாத்திமா, வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் எம்.முருகன், ஜெருசலேம் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் எ. விஜயகுமார் உள்ளிட்டோர் ஆராய்ச்சி கட்டுரைகளைத் தேர்வு செய்யும் தொழில்நுட்ப குழுவில் பங்கேற்றனர்.

மின் தொர்பு மற்றும் கணினி எனும் தலைப்பில் கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பொறியியல் மாணவர்கள் தயாரித்த ஆராய்ச்சிக் கட்டுரை தொகுப்பு மலரை வெளியிட்டு சிறப்பு விருந்தினர் கிறிஸ்டியன் லி சிறப்புரையாற்றி மாணவர்களிடம் பேசினார்.மேலும் இம்மாநாட்டில் கல்லூரியின் இயக்குனர் எம்.ஏ.பன்னீர்செல்வம், கல்லூரி மாணவர் நலத் துறை தலைவர் பழ. முத்தையா, மாநாட்டு அமைப்புச் செயலாளர்கள் பி. செல்வலட்சுமி, எம்.ஆனந்து, எஸ்.சுதர்சன், டி.ஷீலாடினா, கே. சீனிவாசன், ஜி. காமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *