செய்திகள்

தவறு செய்தவரை காப்பாற்றும் முயற்சியில் ஒருபோதும் ஈடுபட மாட்டார் தமிழக முதல்வர்

சாத்தான்குளம் பிரச்சனையில்

தவறு செய்தவரை காப்பாற்றும் முயற்சியில் ஒருபோதும் ஈடுபட மாட்டார் தமிழக முதல்வர்

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

 

சிவகாசி, ஜூலை.1–

சாத்தான்குளம் பிரச்சனையில் தவறு செய்தவரை காப்பாற்றும் முயற்சியில் தமிழக முதல்வர் ஒருபோதும் ஈடுபட மாட்டார் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் நிதி மற்றும் ஒன்றிய பொது நிதி மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ரூ.3.கோடியே 10லட்சம் மதிப்பீட்டில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டம், ஒன்றிய பொது நிதி மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

அதன்படி நேற்றுமுன்தினம் பள்ளபட்டி ஊராட்சி மற்றும் நாரணாபுரம் ஊராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) சுக்கிரவாரபட்டியில் அங்கன்வாடி கட்டிடம், கட்டசின்னம்பட்டி, சிலோன்காலனியில் நியாயவிலைக்கடை, ஆனையூர் ஊராட்சி அய்யம்பட்டியில் நியாயவிலை கடை, ஊராம்பட்டியில் அங்கன்வாடி கட்டிடம், ஊராம்பட்டி காலனியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி,. ஏ..துலுக்கபட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பூலாவூரணி சன்னாசிபட்டியில் அங்கன்வாடி கட்டிடம், சித்துராஜபுரம் அய்யனார் காலணி, சித்துராஜபுரம் கீழூர் விஸ்வநத்தம் ஊராட்சி சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில் நியாயவிலைக்கடை, முனீஸ்வரர் காலனியில் சுகாதார வளாகம் ஆகிய பணிகளை அமைச்சர் நேற்று தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் சுரேஷ், சிவகாசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ரவி, இராமமூர்த்திராஜ், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி, மாவட்ட கவுன்சிலர் பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, மாவ்ட்ட கவுன்சிலர் நர்மதாஜெயக்குமார், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர் ஆழ்வார்ராமானுஜம், ஜெகத்சிங்பிரபு, ஆரோக்கியரீட்டா, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ரமணா, ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன், விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், சித்துராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லீலாவதிசுப்புராஜ், சுக்கிரர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் செல்வம், ஊராம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், ஏ.துலுக்கபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள்சுப்புராஜ், பூலாவூரணி ஊராட்சி மன்ற தலைவர் குமார், ஒன்றிய கவுன்சிலர் உத்தமராஜா, கட்டச்சின்னாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி, துணைத்தலைவர் விஜயராஜ், கூட்டுறவு சங்க தலைவர் ரெங்கபாளையம் காசிராஜன், சிவகாசி ஒன்றிய கழக துணைச்செயலாளர் அமுதாகருப்பசாமி, சிவகாசி ஒன்றிய மீணவரணி செயலாளர் பாலகணேஷ், நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர் கார்த்திக் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எம்.கே.என்.செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, தமிழக அரசுக்கு ஸ்டாலின் கொடுக்கும் அறிவுரைகள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருந்தால் முதல்வர் ஏற்றுக் கொள்வார்.

தமிழக அரசுக்கு ஸ்டாலின் கொடுக்கும் அறிக்கைகள் அனைத்துமே அக்கப்போறானதாகத்தான் உள்ளது கொரானா தடுப்பு பணியில் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்ற கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டுவது குறை கூறுபவர்கள் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் என்பது போல் உள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ,மின்சாரத்தடை, உணவு போன்ற அத்தியவாசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் மக்களுக்கு இல்லை.

சாத்தான்குளம் பிரச்சனையில் தவறு செய்தவரை காப்பாற்றும் முயற்சியை முதல்வர் ஒருபோதும் எடுக்க மாட்டார்.அதனால்தான் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து உள்ளார். தமிழகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் யாரும் கிராமப் பகுதிகளுக்குள் செல்லவில்லை என்றால் மக்களிடம் பயம் வந்துவிடும். அதனால்தான் நாங்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்கள் பணியாற்றுகின்றோம். கொரோனாவிற்கு முதலில் மருந்தே மன தைரியம்தான்.மன தைரியத்தை கொடுக்கும் ஒரு ஆட்சியாகதான் எடப்பாடியார் ஆட்சி இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை எப்போதும் தடுப்பது கிடையாது. அவர்கள் அனைவருமே அவர்களது பணியைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *