செய்திகள்

தலையில் காயம்: சசி தரூர் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம், ஏப். 15–

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதியின் வேட்பாளருமான சசி தரூர் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 23 ஆம் தேதி கேரளாவில் நடக்கும் மக்களவை தேர்தலில், திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் அவர், அந்த பகுதியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோவில் பூஜையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது அவரது எடைக்கு எடை காணிக்கை வழங்குவதற்காக துலாபாரம் சடங்கில் கலந்து கொண்ட போது, எதிர்பாராத விதமாக சசிதரூருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் வழிந்த நிலையில் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தற்போது 6 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கடந்த இரு முறையும் தொடர்ந்து திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *