செய்திகள்

தமிழ் மரபு அறக்கட்டளை சர்வதேச இணைய ஒருவாரக் கருத்தரங்கு, ‘கடிகை’ ஆன்லைன் கல்விக் கழகம்

உலக அருங்காட்சி தினத்தையொட்டி
தமிழ் மரபு அறக்கட்டளை சர்வதேச இணைய ஒருவாரக் கருத்தரங்கு, ‘கடிகை’ ஆன்லைன் கல்விக் கழகம்

சென்னை, மே. 22

சர்வதேச அருங்காட்சியக நாளை முன்னிட்டு ஒரு வார சர்வதேச இணையக் கருத்தரங்குத் தொடரையும், கடிகை இணைய முதன்மை நிலை கல்விக் கழகத்தினையும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தக் கருத்தரங்கு தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு சொற்பொழிவு என்ற வகையில் வருகின்ற 24 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்கிறது. வரலாற்றைப் பாதுகாக்க தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிறது.

கடந்த 19 ஆண்டுளாக உலக அளவில் தமிழர் மொழி வரலாறு பண்பாடு சமூகவியல் தொடர்பான ஆவணப் பதிவுகளில் சீரிய முறையில் தொண்டாற்றி வரும் தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் சுபாஷிணியை பாராட்டுகிறேன் என்றார் மா.பா. பாண்டியராஜன். இந்த அமைப்பின் முயற்சிகளில் ஒன்றாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் ஐம்பொன் சிலைகள் ஐரோப்பாவிலேயே முதன் முறையாக நிறுவப்பட்டன.

இவ்வமைப்பின் முயற்சியாக கடிகை தமிழ் மரபு முதன்மை நிலை இணைய கல்விக் கழகம் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழி மற்றும் வரலாறு பற்றி அறிந்து கொள்ள விரும்பும் உலக மக்களுக்கும் இணையம் வழியாக வரலாற்றுப் பாடங்களை வழங்குகிறது.

சர்வதேச அருங்காட்சியக ஆணையம் ICOM முடன் தமிழக அரசின் தொல்லியல் துறை தொடர்பில் உள்ளது. கீழடி அருங்காட்சியகத்தின் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். தமிழக அரசின் தமிழ் மற்றும் அருங்காட்சியக முயற்சிகளை கடிகை மூலமாக தொடர்ந்து செயல்பட வாய்ப்புள்ளது. அருங்காட்சியகத்தின் மேம்பாட்டிற்குத் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து செயலாற்ற இயலும் என்றும் அமைச்சர் மா.பா பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழ் பல்கலைக்கழக கடல்சார் தொல்லியல் துறைத்தலைவர் செல்வகுமார் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை சுபாஷிணி ஆகியோர் பேசினர்.

தமிழக அருங்காட்சியக ஆணையர் சண்முகம் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளை பாராட்டிப் பேசியதுடன், முதல் முயற்சியாக கல்லூரிகளில் இருந்து ‘கியூரேட்டர்’

உருவாக்குதல்; 3டி பிரிண்டிங் மூலமாக பூம்புகார் நிறுவனத்துடன் இணைந்து சின்னங்களை உருவாக்குதல் போன்ற கருத்துக்களை முன் வைத்தார்.

ஒடிசா மாநிலத்தின் தலைமை ஆலோசகர் பாலகிருஷ்ணன் கடிகை கல்விக் கழகத்தை வாழ்த்தியதுடன் ஒடிசா மாநிலத்தில் பூர்வக்குடி இனமக்களுக்காக உருவாக்கப்பட்ட ’கலாபூபி’ அருங்காட்சியக உருவாக்கம் பற்றியும் குறிப்பிட்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ‘சூம்’ இணைய செயலி வழியாக 87 பேரும், பேஸ்புக் இணைய நேரலை வழியாக 2497 பேரும் ஒரே நேரத்தில் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *