செய்திகள்

தமிழ்நாட்டில் 21ந்தேதி முகரம் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு

சென்னை, செப்.12-

தமிழ்நாட்டில் 21ந்தேதி முகரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாவூதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முகரம் மாதத்திற்கான பிறை கடந்த 10-ந்தேதி (திங்கட்கிழமை) தென்பட்டது. இதனை தொடர்ந்து வரும் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முகரம் பண்டிகை தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *