செய்திகள்

தமிழ்நாட்டில் மேலும் 5 இடங்களில் அகழாய்வு: அமர்நாத் ராமகிருஷ்ணா

கன்னியாகுமரி, ஏப். 19–

தமிழ்நாட்டில் சிவகளை, வெம்பக்கோட்டை, வைகை ஆற்றங்கரை உட்பட 5 இடங்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட உள்ளன என்று தென்னிந்திய கோயில் ஆய்வுத் துறையின் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

உலக தொன்மரபு நாளை முன்னிட்டு, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறை, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் மற்றும் நாகர்கோயில் ஸ்காட் கிறித்துவ கல்லூரியின் வரலாற்று ஆய்வுத் துறை ஆகியவை இணைந்து “தொன்மரபு மற்றும் காலநிலை: பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அகழாய்வின் முக்கியத்துவம்” என்ற கருப்பொருளில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

தமிழர் தொன்மரபு வெளியாகும்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா, நிகழ்ச்சிக்கு பின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

“தமிழ்நாட்டில் சிவகளை, வெம்பக்கோட்டை, வைகை ஆற்றங்கரை உட்பட ஐந்து இடங்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் தமிழர்களின் தொன்மரபு மற்றும் பழம்பண்பாடுகள் வெளிக்கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.