சென்னை, பிப்.1-
தமிழ்நாட்டில் 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடங்குவர். விமான நிலைய பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை. சிகிச்சையில் 55 பேர் உள்ளனர். சிகிச்சை முடிந்த நிலையில் 10 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்னும் 40 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசின் பொது சுகாதார இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.