செய்திகள்

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 756 பேருக்கு தொற்று உறுதி

சென்னை, நவ.22-

தமிழகத்தில் நேற்று 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 705 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 445 ஆண்கள், 311 பெண்கள் என மொத்தம் 756 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 112 பேரும், கோவையில் 130 பேரும், செங்கல்பட்டில் 56 பேரும், ஈரோட்டில் 80 பேரும், சேலத்தில் 44 பேரும், திருப்பூரில் 49 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் குறைந்தபட்சமாக அரியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், விருதுநகரில் தலா 2 பேரும், தேனி, ராணிப்பேட்டை, புதுக்கோட்டையில் தலா ஒருவரும் உள்பட 14 மாவட்டங்களில் 5-க்கும் குறைவானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. திருப்பத்தூர், தென்காசியில் புதிய பாதிப்பும் ஏதும் இல்லை. அதேபோல் குழந்தைகள் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.

அதன்படி, 12 வயதுக்கு உட்பட்ட 48 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 120 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 59-வது நாளாக பாதிப்பு குறைந்தது.

தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 24 லட்சத்து 28 ஆயிரத்து 166 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 27 லட்சத்து 20 ஆயிரத்து 271 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 7 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 7 பேரும் என 14 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். 30 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 ஆயிரத்து 375 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 847 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 8 ஆயிரத்து 722 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *