செய்திகள்

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 841 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி

சென்னை, நவ. 9–

தமிழகத்தில் நேற்று 841 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் நேற்று 1 லட்சத்து 563 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 841 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் 126 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 937 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவால் இதுவரை 27 லட்சத்து 9 ஆயிரத்து 921 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 26 லட்சத்து 63 ஆயிரத்து 323 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 10 ஆயிரத்து 372 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கி.வீரமணிக்கு கொரோனா பாதிப்பு

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அவரது மனைவி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருவரும் சிகிச்சைக்கு பின்பு நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சில நாட்களில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *