செய்திகள்

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக செயற்கை தோள்பட்டை இணைக்கும் நவீன சிகிச்சை: லீமா மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

Spread the love

சென்னை ஆக. 24

பச்சையப்பன் கல்லூரி எதிரே நியூ ஆவடி சாலையில் உள்ள லீமா மருத்துவமனையில் தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக தோள்பட்டை முறிவுக்கு தகடு, ஸ்குரூ பொருத்துவதற்கு பதிலாக செயற்கையாக தயாரிக்கப்பட்ட தோள்பட்டை எலும்பை ஒரு மணி நேரத்தில் பொருத்தியுள்ளனர்.

இந்த சிகிச்சையை இதன் சீனியர் மூட்டு மாற்று ஆபரேஷன் நிபுணர் டாக்டர் ரவி கிருபானந்தன் குழுவினர் செய்து சாதனை படைத்துள்ளனர் என்று மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் ராஜ்குமார் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தோள்பட்டை முறிவுக்கு இதுவரை பொருத்தப்படும் தகடு, ஸ்குரூ வாழ்க்கை முழுவதும் நோயாளிக்கு பிரச்சனை ஏற்படுத்தக் கூடும். ஆனால் செயற்கை மூட்டு எளிதில், உடல் தசைகளுடன் பொருந்தி விடும். வலி ஏற்படுத்தாது. ஒரே நாளில் வீடு திரும்பலாம்.

47 வயது நோயாளிக்கு தோள்பட்டை பாதிக்கப்பட்டிருருந்தது. தகடு, ஸ்குரூ பொருத்த முடியாது. புதிதாக செயற்கை தோள் மூட்டு அவருக்கு பொருத்தப்பட்டு, குணமடைந்தார் என்று டாக்டர் ரவி கிருபானந்தன் தெரிவித்தார்.

டாக்டர் எஸ். ராஜ்குமார் பேசுகையில், இந்த நவீன செயற்கை தோள்பட்டை ஆபரேஷன் இந்தியாவில் இன்றும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. டாக்டர் ரவி கிருபானந்தன் மற்றும் குழுவினர் வெற்றிகரமாக இதை செய்து முடித்தனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *