செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டி

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டசபை தேர்தல்:

234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டி

எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் உள்பட 28 பேர்

சென்னை, மார்ச்.23-

தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது.

அண்ணா தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ந் தேதி முதல் 19ந்தேதி வரை நடைபெற்றது. இதில் ஆண்கள் சார்பில் 6 ஆயிரத்து 183 மனுக்கள், பெண்கள் சார்பில் 1,069 மனுக்கள், திருநங்கைகள் சார்பில் 3 மனுக்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதில் மொத்தம் 4 ஆயிரத்து 506 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 741 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதில் நெல்லை தொகுதி அ.ம.மு.க., ச.ம.க. வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

வேட்புமனுக்கள் பரிசீலினை அடிப்படையில் 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 506 பேர் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றனர்.

நேற்று பலர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். 294 பேர் வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகி உள்ளனர்.

இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நேற்று மாலை வெளியானது. அதன்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 6 பேரும் போட்டி களத்தில் உள்ளனர். சென்னையில் அடங்கி உள்ள 16 தொகுதிகளில் 391 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கொளத்தூர் தொகுதியில் 35 பேரும், குறைந்தபட்சமாக தி.நகரில் 14 பேரும் போட்டியிடுகின்றனர்.

அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது.


முக்கிய கட்சி தலைவர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் வருமாறு:-–

எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

1. எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.)

2. சம்பத்குமார் (தி.மு.க.)

3. ஜமுனா (பகுஜன் சமாஜ் கட்சி)

4. தாசப்பராஜ் (மக்கள் நீதி மய்யம்)

5. பூக்கடை சேகர் (அ.ம.மு.க.)

6. மணி (தேசிய மக்கள் கழகம்)

7. மணிகண்டன்

(தமிழ்நாடு இளைஞர் கட்சி)

8. சூரியமூர்த்தி

(எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி)

9. குணசேகரன்

(மை இந்தியா கட்சி)

10. சமூக சேவகி ஈஸ்வரி (அம்பேத்கர் ரைட் பார்ட்டி ஆப் இந்தியா)

11. ஸ்ரீரத்னா (நாம் தமிழர் கட்சி)

12. அக்னி ஸ்ரீராமசந்திரன் (சுயே.)

13. ஈஸ்வரமூர்த்தி (சுயே.)

14. பி.ஈஸ்வரமூர்த்தி (சுயே.)

15. அய்யப்பன் (சுயே.)

16. கதிரவன் (சுயே.)

17. கதிரேசன் (சுயே.)

18. குகேஸ்குமார் (சுயே.)

19. சண்முகம் (சுயே.)

20. சவுந்தரராஜன் (சுயே.)

21. டாக்டர் பத்மராஜன் (சுயே.)

22. பழனிசாமி (சுயே.)

23. பாலசுப்பிரமணியம் (சுயே.)

24. பாலமுருகன் (சுயே.)

25. முருகன் (சுயே.)

26. லட்சுமி (சுயே.)

27. லோகநாதன் (சுயே.)

28. ஸ்டாலின் (சுயே.)

ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 24 பேர் போட்டியிடுகின்றனர்.

அதன் விவரம் வருமாறு:-

1. ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.)

2. தங்கதமிழ்செல்வன் (தி.மு.க.)

3. முத்துசாமி (அ.ம.மு.க.)

4. பிரேம்சந்தர் (நாம் தமிழர் கட்சி)

5. கணேஷ்குமார் (மக்கள் நீதி மய்யம்)

6. ஹக்கீம்

(அ.இ.திரிணாமுல் காங்கிரஸ்)

7. அருண்குமார் (மை இந்தியா கட்சி)

8. கருப்பையா (பகுஜன் சமாஜ் கட்சி)

9. கர்ணன்

(அண்ணா திராவிடர் கழகம்)

10. கிருஷ்ணவேணி (அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்)

11. அபுதாகீர் (சுயே.)

12. அன்பழகன் (சுயே.)

13. ஆனந்தராஜ் (சுயே.)

14. கிருஷ்ணன் (சுயே.)

15. குமரகுருபரன் (சுயே.)

16. சலீம் (சுயே.)

17. செந்தில்குமார் (சுயே.)

18. தமிழ்செல்வன் (சுயே.)

19. நந்தகோபால் (சுயே.)

20. நாகேந்திரன் (சுயே.)

21. மணிமாறன் (சுயே.)

22. ராம்பிரகாஷ் (சுயே.)

23. அ.ராஜாமுகமது (சுயே.)

24. த.ராஜாமுகமது (சுயே.)

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டி யிடுகிறார். அந்த தொகுதியில் 35 பேர் களத்தில் உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

1. ஆதிராஜாராம் (அ.தி.மு.க.)

2. மு.க.ஸ்டாலின் (தி.மு.க.)

3. ஜெ.ஆறுமுகம் (அ.ம.மு.க.)

4. ஏ.ஜெகதீஷ்குமார் (ம.நீ.ம.)

5. பெ.கெமில்ஸ் செல்வா

(நாம் தமிழர்)

6. ஜமால் முகமது மீரா

(பகுஜன் சமாஜ்)

7.ஜி.வேல்முருகன் (சிவசேனா)

மற்றும் 28 பேர் சுயேச்சைகள்

கமல்ஹாசன்

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்பட 21 பேர் போட்டியிடுகிறார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

1.வானதிசீனிவாசன் (பா.ஜனதா)

2. கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்)

3. மயூரா ஜெயக்குமார் (காங்கிரஸ்)

4. சேலஞ்சர் துரை (அ.ம.மு.க.)

5. அப்துல் வகாப் (நாம் தமிழர் கட்சி)

6. ரோகன் (பகுஜன் சமாஜ்)

7. கோபாலகிருஷ்ணன்

(நியு ஜெனரேஷன் பீப்பிள்ஸ்)

8. டி.சண்முகவேல்

(ஞான சங்கம் கட்சி)

9. கே.ராகுல் காந்தி

(இந்துஸ்தான் ஜனதா கட்சி)

10. எம்.விவேக் சுப்பிரமணியம்

(மனித உரிமைகள் கழகம்) மற்றும் 11 பேர் சுயேச்சைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *