செய்திகள்

தமிழக அரசின் கையிருப்பில் 7½ லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள்

சென்னை, ஆக.13-

கொரோனா சிகிச்சை மேற்கொள்ள தமிழக அரசின் கையிருப்பில் 7½ லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் உள்ளன.

தமிழகத்தில் தினமும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் தமிழக அரசு கொரோனா பரிசோதனைக்காக கூடுதலாக ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகளை கொள்முதல் செய்து வருகிறது. முதற்கட்டமாக தென் கொரியா நிறுவனத்திடம் இருந்து 15 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் வாங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்க கடந்த மாதம் ஒப்பந்தம் போடப்பட்டு கருவிகள் வாங்கப்பட்டன.

இந்தநிலையில் தற்போது கூடுதலாக 15 லட்சத்து 80 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்கொரியாவிடம் இருந்து 12 லட்சம், அமெரிக்காவிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிடம் இருந்து தலா ஒரு லட்சம், இந்திய நிறுவனத்திடம் இருந்து 50 ஆயிரம் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டது. இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரம் கருவிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன எனவும், மீதமுள்ள கருவிகள் 3 வாரத்துக்குள் தமிழகம் வந்தடையும் எனவும், தற்போது தமிழக அரசிடம் 7 லட்சத்து 45 ஆயிரம் கருவிகள் கையிருப்பில் உள்ளன எனவும் தமிழக மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *