செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Spread the love

சென்னை, செப். 12

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சூளைமேடு, அண்ணாநகர், மீனம்பாக்கம், பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில், வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 17 செ.மீ., ஜெயங்கொண்டத்தில் 14 செ.மீ., மயிலாடுதுறையில் 13 செ.மீ., சங்கராபுரம், பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை 8 செ.மீ., காட்டுமன்னார்கோவில், பூண்டியில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *