செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்: பாஜக நிர்வாகிகளுடன் மோடி ஆலோசனை

புதுடெல்லி, பிப். 21–

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டசபை தேர்தல்கள் தொடர்பாக டெல்லியில் பாரதீய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான பிரச்சாரம் களைகட்டியுள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக அண்மையில் இந்த 5 மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்களையும் நியமித்திருந்தது. மேலும் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட பாஜக தேசிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் இதுவரை நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் தேசிய நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *