செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஆக. 26–

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வெப்பச்சலனம்‌ காரணமாக 26–ந்தேதி (இன்று) தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்‌சி, கடலூர்‌, திண்டுக்கல்‌, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌.

நாளை (27–ந்தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்‌சி, கடலூர்‌, திண்டுக்கல்‌, நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, சேலம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌.

வளிமண்டலத்தில்‌ ஈரப்பதத்துடன்‌ கூடிய மேற்கு திசை காற்று வலுவடைவதன்‌ காரணமாக, 28–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, விருதுநகர்‌, தூத்துக்குடி, சேலம்‌, ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் மற்றும்‌ புதுவையில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.

கடந்த 24 மணி நேரத்தில்‌ அதிகபட்ச பெய்த மழை அளவு விவரம் வருமாறு:–

விழுப்புரம் அனந்தபுரம்‌ – 10 செ.மீ., கே.சி.எஸ்.மில்‌ அரியலூர்‌ – 8 செ.மீ., மூண்ங்கில்துறைப்பட்டு – 6 செ.மீ., பெரியகுளம்‌, தண்டராம்பேட்டை, கிருஷ்ணராயபுரம்‌, அரூர்‌ தலா 5 செ.மீ., முசிறி 4 செ.மீ., வடபுதுப்பட்டு, கொடைக்கானல்‌, குடியாத்தம்‌, சத்தியமங்கலம்‌, கோத்தகிரி தலா 3 செ.மீ., சித்தார்‌, விரகனுர்‌ அணை (மதுரை) தலா 2 செ.மீ., விருதுநகர்‌, தேவகோட்டை, மேட்டூர்‌ தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று முதல்‌ 28–ந்தேதி வரை மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

29 மற்றும் 30–ந்தேதி வரை கேரள கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகள் மற்றும் இன்று முதல் 30–ந்தேதி வரை தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *