செய்திகள்

தமிழகத்தில் வயது வாரியாக மொத்த வாக்காளர் விவரங்கள்

சென்னை, ஏப். 2–

தமிழகத்தில் வாக்களிக்க உள்ள, வயது வாரியான வாக்காளர்களின் எண்ணிக்கையில் 30 முதல் 39 வயது வரையிலான எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தேர்தல் ஆணையம் பரிசு பொருள்கள், ஆவணமின்றி எடுத்து செல்லப்படும் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றன.

மேலும், சட்டமன்ற தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது.

30–39 வயதுள்ளோர் அதிகம்

இந்நிலையில், தமிழகத்தில் வாக்களிக்க உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வயது வாரியான எண்ணிக்கை வெளியாகி உள்ளது. அதில் 30 முதல் 39 வயது வரையாக வாக்காளர்களே அதிக அளவில் உள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 18–19 வயதுடையோர் 13 லட்சத்து 83 ஆயிரத்து 610 வாக்காளர்களும் 20–29 வயதுடைய வாக்காளர்கள் 1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 094 பேராகவும் 30–39 வயதுடைய வாக்காளர்களில் 1 கோடியே 38 லட்சத்து 81 ஆயிரத்து 486 பேராக உள்ளனர்.

அதேபோல், 40–49 வயதுடைய வாக்காளர்களில் 1 கோடியே 32 லட்சத்து 60 ஆயிரத்து 336 பேர் உள்ளனர். மேலும் 50–59 வயதுடைய வாக்காளர்களில் 1 கோடியே 3 லட்சத்து 28 ஆயிரத்து 446 பேரும் 60–69 வயதுடைய வாக்காளர்களில் 67 லட்சத்து 21 ஆயிரத்து 432 பேரும் 70–79 வயதுடையோரில் 35 லட்சத்து 26 ஆயிரத்து 97 ஆகவும் உள்ளது. அதேபோல் 80 வயதுக்கு மேற்பட்டோர் 12 லட்சத்து 87 ஆயிரத்து 457 வாக்காளர்களும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *