செய்திகள்

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பை தடுக்க 35-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ குழு அமைப்பு

Spread the love

சென்னை, மே.19-

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பை தடுக்க 35க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை முறைகளை மேம்படுத்த சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் சிறப்புக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் மருத்துவத்துறை நிபுணர்கள், முதுநிலை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிகிச்சைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய மருத்துவ சங்கம்(ஐ.எம்.ஏ) தமிழ்நாடு தலைவர் டாக்டர் சி.என்.ராஜா இதுபற்றி கூறியதாவது:-

தமிழகத்தில் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு நாள்பட்ட நோய்களால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தான். இதனால் வரும் காலங்களில் இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்கவும், முதியவர்களையும், நாள்பட்ட நோயாளிகளையும் கொரோனா வைரசில் இருந்து காப்பாற்ற பிரத்யேக வழிகாட்டுதல் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் சிகிச்சை முறைகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பட்ட சிகிச்சைக்காக 35-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசிடம் இது சம்பந்தமான விரிவான அறிக்கையை இந்த சிறப்பு குழு விரைவில் தாக்கல் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *