நாடும் நடப்பும்

தமிழகத்தில் ஆதார் சேவை: முதல்வர் ஸ்டாலின் உறுதி


ஆர். முத்துக்குமார்


சமீபமாக தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என்ற விளம்பரங்கள் கண்ணில் தென்படுகிறது, அதன் பின்னணியில் திட்டங்கள், சலுகைகள், மானியங்கள் எல்லாம் உரிய பயனாளிகளை சென்றடைய வேண்டும் என்ற அக்கறை தென்படுகிறது.

தமிழக அரசின் சலுகைகள், மானியங்கள், நலத் திட்டப் பயன்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வருவாய், சமூக நலம், மின்சாரம் உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசின் திட்டங்களிலும் மாநில நிதியை இணைத்து வீட்டுவசதி, ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதுதவிர, மத்திய அரசு நிறுத்தியுள்ள பல்வேறு திட்டங்களை, மாநில அரசு தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

ஏற்கெனவே, குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சமூக நலத் துறையின் கீழ் பல்வேறு பயன்களைப் பெறும் பயனாளிகளுக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் போலி வாக்காளர்களைக் கண்டறியும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஐஎஃப்எச்ஆர்எம்எஸ் எனப்படும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் மூலம் ஆன்லைன் வாயிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கே உதவித்தொகைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. கருவூலம் மற்றும் கணக்குத் துறை வாயிலாக இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

தமிழக அரசுப் பணியாளர்களின் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு திட்டங்களின் பலன்கள் ஆகியவை தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் சிறுவர்கள், பிறந்த குழந்தைகளும் குடும்பத் திட்டத்தில் பயன் அடைய அவர்களுக்கும் ஆதார் மிக அவசியமாகுகிறது.

இதை உணர்ந்து இனி வருங்காலங்களில் அதிமுக்கிய ஆதார் எண்ணை வழங்குவது பிறந்த நிமிடம் முதல் உருவாக்கிட வழி கண்டாக வேண்டும்.

பிறப்பின் போதே ஆதார் எண் உருவாகிவிட்டால் அந்நொடி முதலே குடிமகனின் அனைத்து வசதிகளையும் பெறும் குடிமகனாக மாறி வருகிறார்.

இந்த ஆதார் எண்ணை கொண்டு பள்ளிகளில் இடம் ஒதுக்குவதை கூட உறுதி செய்யலாம்.

அரசுப் பள்ளிகளிலும் நகராட்சிப் பள்ளிகளிலும் ஆதார் தகவலின்படி அப்பிள்ளைகள் வாழும் பகுதிகளில் இடம் தந்து படிக்க வைத்து விட்டால், அனைத்து பள்ளி கட்டுமானம் நல்லமுளையில் பயனுக்கு வந்துவிடும்.

தமிழகத்தில் 78% அரசு தொடக்க நடுநிலை பள்ளிகளில் நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் தான் படிப்பதாக இம்மாத துவக்கத்தில் வெளியான அரசுப் பள்ளி கல்வி இயக்கம் தந்துள்ள புள்ளி விவரம் சுட்டிக்காட்டி தகவல் வெளியாகி இருந்தது.

தமிழ்நாட்டில் 24,310 தொடக்கப் பள்ளிகள், 7,024 நடுநிலைப் பள்ளிகள், 3,135 உயர்நிலைப் பள்ளிகள், 3,110 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 37,579 அரசுப் பள்ளிகள் உள்ளன. தொடக்கப் பள்ளிகள் தொடங்கி மேல்நிலைப் பள்ளிகள் வரை, 8,328 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் தனியாரில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என எல்லாம் சேர்த்தே 12,382 பள்ளிகள் தான் உள்ளன. அரசுப் பள்ளிகளில் 45,93,422 பேரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 22,25,308 பேரும் படிக்கிறார். ஆனால் 12,382 தனியார் பள்ளிகளில் 64,15,398 பேர் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிகள் மக்களின் முதன்மைத் தெரிவாக இல்லை என்பதை இதிலிருந்து உணரலாம். மக்கள் தொகை, அடையாள அட்டைகளாக வங்கிகளிலும் இதர பொது அலுவலகங்களிலும் மிக உதவியான ஒன்றாக மாறிவிட்ட ஆதார் எண்களை கொண்டு நிதி சேவைகள் பெறுவதுடன் கல்வி, மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு முக்கிய சேவைகளுக்கும் உதவும் வகையில் செயல்பட வைத்தாக வேண்டும்.

இதுவரை பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் உதவுவது போன்று கல்வித்துறையிலும் ஓர் அங்கமாக செயல்பட ஆதார் திட்டத்தை உதவிக்கு வைத்துக்கொள்ள முதல்வர் ஸ்டாலின் தயங்கக்கூடாது, கட்டாயமாக என்று உறுதியான முடிவை எடுத்து சமநிலை சமுதாயம் உறுதி பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தால் அது தமிழகத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிகளுக்கு முத்தாய்பான முதல் அடியாகவே அமைந்து விடும்.Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *