வாழ்வியல்

தட்டச்சு, சுருக்கெழுத்து பழகினால் வேலை நிச்சயம்!

இன்று பெரிய படிப்பு படித்தவர்களுக்கே நிரந்தர வேலை கிடைக்கவில்லை. ஆனால் சாதாரண தமிழ், ஆங்கிலம் டைப்பிங், டிடிபி, ஸ்டெனோகிராபி என்று அழைக்கப்படும் (சுருக்கெழுத்து), கணக்கியல் (அக்கவுண்டன்சி), கம்ப்யூட்டர் மொழிகள், டிசைனிங், வெப் டிசைனிங் போன்றவை படித்தவர்கள் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் அதிக சம்பளம் கேட்பார்கள். இது தான் உண்மை நிலை.

ஆங்கிலேயர் காலத்திலிருந்து டைப்பிங் படித்தவர்கள், ஸ்டெனோ படித்தவர்களுக்கு உடன் வேலை கிடைக்கிறது. என்ன தான், நவீன யுகம் வந்து, ஆயிரம் புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும், தமிழ், ஆங்கில எழுத்துக்கள் எந்த விரலில் எப்படி டைப் செய்யலாம் என்று அறிந்து பின் தான் கம்ப்யூட்டரில் சிறப்பாக கற்கலாம். அதிகாரிகளின் தனி உதவியாளர்கள், ஸ்டெனோகிராபர்கள் மத்திய, மாநில அரசுகள், கோர்ட்கள், பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளில் ஏராளம் தேவைப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆங்கிலம் (Lower), தமிழ் (Lower), ஆங்கிலம் (Higher), ஆங்கிலம் (Lower), ஸ்டெனோ, கணக்கியலுக்கு சான்று தருவது, தமிழ்நாடு அரசின் ‘‘தொழில்நுட்ப கல்வித் துறை மற்றும் அங்கீகார நிறுவனம் மூலமும் எழுதலாம். தனித் தேர்வர்களும் எழுதலாம். தேர்வு பிப்ரவரி, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். கல்வித் தகுதி, வயது, கட்டணம் போன்ற விவரங்களை www.tndte.gov.in என்னும் இணையத்தில் காணலாம்.

முழு விவரம் பெற…

இயக்குனர், தொழில்நுட்ப கல்வித் துறை,

தமிழ்நாடு அரசு, அண்ணாபல்கலைக்கழக வளாகம், கிண்டி, சென்னை–32, போன்: 2235 1018, www.tn.gov.in/tndte

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *