செய்திகள்

தடுப்பூசி போட்டவர்களையும் டெல்டா வகை வைரஸ் தாக்கும்: ஐசிஎம்ஆர்


டெல்லி, ஆக. 19–

உருமாறிய டெல்டா வகை வைரஸ், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் என்பது ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் 25 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 35,178 ஆகவும், இன்று மீண்டும் பாதிப்பு 36,401 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 440 ஆக இருந்த நிலையில், இன்று 530 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதால், கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.டெல்டா வகை தாக்கும்
இந்நிலையில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களையும் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் தாக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா முதல் அலையை விட, தற்போது உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைந்துள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை என்பது 50 கோடியை எட்டியுள்ள நிலையில் கடந்த 55 நாட்களில் 10 கோடி பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *