செய்திகள்

தங்கம் விலை சவரன் ரூ.39,000; ஒரே நாளில் ரூ.616 அதிகரிப்பு

சென்னை, மார்ச் 2–

சென்னையில் மூன்றாவது நாளாக விலை அதிகரித்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் ரூ.616 அதிகரித்து, சவரன் ரூ.39000 தொட்டுள்ளது.

ரஷியா-உக்ரைன் போர் பதற்றம் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும் தாண்டியது.

சவரனுக்கு ரூ.616 உயர்வு

இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.616 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.4,875-க்கும் ஒரு சவரன் ரூ.39000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லரை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.71.90-க்கும் ஒரு கிலோ விலை ரூ.71900 க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published.