சென்னை, மார்ச் 22–
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.800 குறைந்தது.
தங்கம் விலை கடந்த 10ந்தேதி பவுன் ரூ.41,520 ஆக இருந்தது. அதன் பிறகு தங்கம் விலை தினமும் அதிரடியாக உயரத் தொடங்கியது.
அடுத்தடுத்த நாட்களில் ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என உயரத்தொடங்கிய தங்கம் விலை கடந்த 18ந்தேதி ரூ.44,480 என உச்சம் தொட்டது. நேற்று மீண்டும் பவுனுக்கு 80 அதிகரித்து ரூ.44,560க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் 12 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று குறையத் தொடங்கியுள்ளது. இன்று தங்கம் விலை ரூ.44 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது. பவுனுக்கு ரூ.800 குறைந்து 1 பவுன் தங்கம் ரூ.43,760க்கு விற்கப்படுகிறது.
தங்கம் ஒரு கிராம் நேற்று ரூ.5,570க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.5,470க்கு விற்கப்படுகிறது.
இதே போல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.74.70க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ வெள்ளி ரூ.74 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.