சென்னை, மே 25–
தங்கத்தின் விலை அதிரடியாக இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து சவரன் ரூ.45,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை அண்மையில் குறைவதும் ஏறுவதுமாக நிலையில்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில்,
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.5,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசாக்கள் குறைந்து ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.