சென்னை, பிப். 10–
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.42,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2023-2024 ம் நிதியாண்டுக்கான இந்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, வைர நகைகளுக்காக சுங்கவரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு கண்டிருக்கிறது.
ரூ.440 குறைவு
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.42,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.5,320 க்கு விற்கப்படுகிறது.
அதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்திருக்கிறது. அதன்படி ஒரு கிராம் வெளி ரூ.72.50 க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 72 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலைக் குறைவு இல்லத்தரசிகளிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.