செய்திகள்

டெல்லியில் 40 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று

புதுடெல்லி, ஜன.3–

டெல்லியில் 40 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனாவால் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் டெல்லியில் இதுவரை உருமாறிய புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பிரிட்டனில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.

இது தொடர்பாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:–

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 0.73 சதவீதமாக உள்ளது. இங்கு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மருத்துவமனைகளில் 11 ஆயிரம் படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன. தற்போதைய நிலவரப்படி 2 ஆயிரத்துக் மேற்பட்டோர் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மொத்தம் 40 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் தீவிரத்தை புரிந்துகொண்டுள்ளோம். அதை சமாளிக்க முழுமையாக தயாராக உள்ளோம். உருமாறிய கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சையளிக்க 4 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *