செய்திகள்

டுவிட்டர் அதிகாரி திடீர் பதவி விலகல்

டெல்லி, ஜூன் 28–

டுவிட்டரின் இந்தியாவுக்கான இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி தர்மேந்திர சாதுர் திடீரென்று பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் தளங்களைக் கொண்ட அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்களும் இந்திய பயனர்களின் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், அத்தகைய அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் விலகல்

அந்த வகையில், இந்திய பயனர்களிடமிருந்து வரும் புகார்களைத் தீர்ப்பதற்கு, இந்தியாவுக்கான டுவிட்டர் நிறுவனத்தின் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திர சாதுர் நியமிக்கப்பட்டார். ஆனால், அரசின் விதிப்படி, தர்மேந்திர சாதுரின் பெயர், முகவரி உள்ளிட்டவை டுவிட்டர் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்நிலையில், டுவிட்டரின் இந்தியாவுக்கான இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி தர்மேந்திர சாதுர் பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *