சிறுகதை

“டீ வியாபாரி” | “ராஜா செல்லமுத்து

“இச்சைகளுக்கு இடம் கொடுத்தால் இல்லாமல் போவோம்….”

அலுவலக இடைவேளையில் எப்பொழுதுமில்லாமல் ஒரு டீக் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருக்கின்றது.

“என்னங்க இந்தக் கடையில மட்டும் இவ்வளவு கூட்டம். டீ நல்லா ருசியா போடுறாங்களோ?

“ஆமாமா”

“என்னங்க… பேச்சே ஒரு மாதிரியா இழுவையா இருக்கு” என்ற குமரனின் பேச்சுக்கு உடனே பதில் சொன்னான் பாரதி.

“அங்க பார்த்தியா? அந்த நிக்கிற எல்லாருக்கும் அம்பது வயசுக்கு மேல இருக்கும்ல”

“ஆமா ”

“அங்க நிக்கிற அத்தனை பேருக்கும் பிரஷர், சுகர், ஆனால் டீ குடிக்கணும்ங்கிற பேர்ல இங்க வந்து சும்மா ஒரு ஜொள்ளு விட்டுட்டு போறதில அவங்களுக்கு ஒரு சுகம்ங்க” என்ற பாரதியும் குமரனும் அந்த டீக்கடைக்கு முன்னேறினார்கள்.

” ஏய் வேலாயுதம் அங்க பார்த்தியா? கெக்கே… கெக்கே… என்று உப்புச்சப்பில்லாத வார்த்தைகள் பேசிப் பேசி அந்த ஏரியாவே அதிரும்படி சிரித்துக் கொண்டிருந்தனர் அந்த பெரியவர்கள்.

பாத்தியா அவனுக்கு பேசுற பேச்சுல ஏதாவது அர்த்தம் இருக்கான்னு ..ஆனா ஐநா சபையின் மாநாட்டுக்கு ஆள் சேர்க்கிறது மாதிரியே பேசி சிரிச்சிட்டு இருக்காங்கள்ள என்று இருவரும் முன்னேறியபோது அங்கு ஒரு கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

அத்தனை பேருக்கும் ஐம்பது வயதைக் கடந்திருந்தது.

இவங்க உண்மையிலேயே டீக் குடிக்க தான் வந்தார்களா? பாரு அங்க என்ன நடக்குதுன்னு என்றபோது ஒரு நடுத்தர வயது பெண் டீப் போட்டுக் கொண்டிருந்தாள். டீயை மேலும் கீழும் அவள் ஆற்றிக்கொண்டு இருந்தாள்.

அவள் அப்படி டீ ஆற்றும்போது குவிந்திருந்த கிழடுகள் கண்கள் அவளின் கை அசைவு மேல் போய்ப்போய் வந்து கொண்டிருந்தன.

பேச்சு வாயில் இருந்தாலும் கண்கள் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியே இருந்தன.

வாங்கிய ஒரு டீயை வெகு நேரத்திற்கு மேலாக கையில் வைத்திருந்தனர். அதில் விழுந்து கிடந்த ஈ கூட அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

அடப்பாவிகளா? இவங்களுக்கு இதுல இப்படியொரு சந்தோஷமா?

ஆமா, குமரா, நெறயா விதத்தில் சந்தோசம் கிடைக்கும். இந்த மாதிரி ஆளுங்களுக்கு பாக்குறதிலேயே சந்தோசம். அதான் இப்படி இருக்காங்க என்று பேசிக்கொண்டனர்.

ஒரு பெரியவரிடம் டீ எப்படி இருக்கு? என்றான் பாரதி.

” ம்ம்” சூப்பர் அட்டகாசம் ; அருமை…. ம்ம் ஆகா ஓகோ என்ற அந்த பெரியவரை குமரன் ஒரு மாதிரியாக பார்த்தான்.

ஐயா டீ எப்படி இருக்கு என்று குமரன் இன்னொரு பெரியவருடன் பேச, அவர் கைகளிலே செய்கை செய்து அட்டகாசம் என்றார்.

அப்படியா இருக்கு என்றவர்கள் இரண்டு டீ என ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தனர்.

அந்த நடுத்தர வயதுப்பெண் டீப் போடும் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது டீ குடிக்க வந்த வயதான கூட்டம்.

இவனுக சீக்கிரம் போகமாட்டானுக போல என்ற இருவரின் கைக்கும் டீ வந்து சேர்ந்தது.

” சார் டீ”

” ஓ.கே என்ற இருவரும் டீயை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தனர். வாயில் டீயை வைத்ததும்…

‘‘ த்தூ … த்தூ என்று துப்பினான் பாரதி. குமரனுக்கும் அப்படியே இருந்தது. இதப் போயாடா நல்ல டீன்னு குடிச்சிட்டு இருக்காங்க

என்னமோ அவங்களுக்கு தான் தெரியும் என்று இருவரும் பாதி டீயை குடித்துவிட்டு மீதி டீயை கீழே ஊற்றினர்.

அப்படி ஊற்றும் போதே இன்னொரு பெரியவரிடம் டீ எப்படிங்க என்றான்.

சூப்பர் என்ற பெரியவரை ஒரு மாதிரியாக பார்த்தான் பாரதி.

கொலைவெறிக் கோபம் வந்தது குமரனுக்கு .

இந்த டீ நல்லா இருக்கு அப்படியா?

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. என் வாழ்நாள்ல இப்படி.யாரு டீய நான் சாப்பிட்டதே இல்ல என்ற பெரியவரிடம்

ம்ம் இவரு வாழ்க்கையில டீயே சாப்பிட்டதில்ல போல என்று இருவரும் டீ குடித்ததற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இவங்க என்ன டீ குடிக்க தான் இங்க வாரங்கன்னு நினைச்சியா?

அதான் எனக்கு தெரியுமே எல்லாம் ஜொள்ளு பார்டிக என்ற இருவரும் அந்த டீக்கடையை விட்டு வெளியேறினார்

கொஞ்ச காலம் கழித்து அந்த டீக்கடையில் கணிசமாக கூட்டம் குறைந்திருந்தது . நீண்ட நாட்களுக்கு பிறகு அன்றைக்கு குமரனும் பாரதியும் அந்த டீக்கடையில் இருந்தனர்.

இரண்டு டீ என்று சொல்லிவிட்டு காத்திருந்தனர்.

டீ இரண்டு பேர்களின் கைகளுக்கு வந்து சேர்ந்தது.

இப்ப டீ நல்லா இருக்கே என்று குமரன் சொல்ல

ஆமா என்று பாரதியும் அதையே ஆமோதித்தான்.

ஆனா டீக்கடையில முன்னமாதிரி கூட்டம் இல்லையே .

அத ஏன் கேக்குறீங்க?

இங்க நெறயா பேரு டீ குடிக்க வரலீங்க இங்க ஒரு பொண்ணு இருந்தா. அவளை பார்க்கத் தான் இங்க நெறைய பேரு வந்து உட்கார்ந்தனர்.

அந்த பொண்ணு வேலைய விட்டு போகவும் கூடும் கூட்டம் கொறஞ்சு போச்சு என்ற உண்மையை டீக்கடைக்காரன் சொன்னபோது குமரனுக்கும் பாரதியின் சிரிப்பு வந்தது.

டீ நல்லா இல்லாத போது இங்க கூட்டம் நிறையா இருந்துச்சு. இப்ப டீ நல்லா இருக்கு கூட்டமே இல்ல என்று இருவரும் பேசிக்கொண்டே சாலை வழியே நடந்தனர்.

இவர்கள் கேட்ட பழைய சிரிப்பு சத்தம் ஒரு கடையில் கேட்டு திரும்பினர்.

அங்கே இந்த டீக்கடையில் பார்த்த அதே கிழவர்களின் கூட்டம் கூடி நின்று கொண்டிருந்தது.

ஆகா இவங்க? இங்க ஏன் நின்னுட்டு இருக்காங்க என்று அருகில் போனபோது அங்கே பால் பாத்திரத்திலிருந்த பாலாடையை அழகாக ஒதுக்கி விட்டுக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *