சினிமா

‘டியூன்’ படத்துக்கு 6 ஆஸ்கர் விருதுகள்

சிறந்த நடிகர் – வில் ஸ்மித் * சிறந்த நடிகை ஜெசிகா சேஸ்டெய்ன்

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச்.28–

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஜெசிகா சேஸ்டெய்ன் வென்றனர்.

‘டியூன்’ திரைப்படம் 6 விருதுகளைக் குவித்து சாதனை படைத்தது. இந்த திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது.

‘அகடமி அவார்ட்ஸ்’ என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 94வது ஆண்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. மொத்தம் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் கரோனா காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது.

முதல் தடவையாக 3 பெண் தொகுப்பாளர்கள்

அதுபோலவே ஆஸ்கர் விருது கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில் ஆஸ்கர் விருது விழாவை இந்த ஆண்டு 3 பெண் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஜப்பானிய திரைப்படமான “டிரைவ் மை கார்” சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.

கோடா

சிறந்த படம்: கோடா, சிறந்த இயக்குனர்: ஜேன் கேம்பியன் (தி பவர் ஆஃப் தி டாக்), சிறந்த நடிகை: ஜெசிகா சாஸ்டெய்ன் (தி ஐஸ் ஆஃப் டாமி ஃபே), சிறந்த நடிகர்: வில் ஸ்மித் (கிங் ரிச்சர்ட்), சிறந்த துணை நடிகை: அரியானா டிபோஸ் (வெஸ்ட் சைட் ஸ்டோரி), சிறந்த துணை நடிகர்: ட்ராய் கோட்சூர் (கோடா), சிறந்த அசல் திரைக்கதை: பெல்ஃபாஸ்ட், சிறந்த தழுவல் திரைக்கதை: கோடா, சிறந்த சர்வதேச திரைப்படம்: டிரைவ் மை கார் (ஜப்பான்), சிறந்த அனிமேஷன் திரைப்படம்: என்காண்டோ, சிறந்த ஆவணப்படம்: சம்மர் ஆஃப் சோல், சிறந்த ஆவணப்பட குறும்படம்: தி குயின் ஆஃப் கூடைப்பந்து, சிறந்த அனிமேஷன் குறும்படம்: தி விண்ட்ஷீல்ட் வைப்பர், சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்: தி லாங் குட்பை, சிறந்த அசல் ஸ்கோர்: டூன், சிறந்த அசல் பாடல்: நோ டைம் டு டை (நோ டைம் டு டை), சிறந்த ஒளிப்பதிவு: டூன், சிறந்த ஆடை வடிவமைப்பு: க்ரூயெல்லா, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: டூன், சிறந்த ஒப்பனை மற்றும் முடி: த ஐஸ் ஆஃப் டாமி ஃபே, சிறந்த ஒலி:டூன்

Leave a Reply

Your email address will not be published.