சிறுகதை

டிக்கெட்- ராஜா செல்லமுத்து

முத்து எப்போது படத்திற்கு சென்றாலும் யாரையாவது ஒருவரை அழைத்துக் கொண்டுதான் சொல்வான். அது அவனது பழக்கம்.

உடன் ஒருவர் அமர்ந்து படம் பார்க்கும் இன்பமே தனி என்று சொல்வான்.

அது மட்டுமல்லாமல் அவனை டிக்கெட் ரிசர்வ் செய்வான். இடைவேளையின் போது நொறுக்கு தீனியும் அவனே ஆர்டர் செய்து வரும் நண்பர்களுக்கு கொடுப்பான் .

தவறியும் வரும் நண்பர்கள் இடைவேளையின் போது நொறுக்கு தீனிகள் வாங்கித் தருவது இல்லை.

அவர்கள் செலவில் ஏதாவது செய்வது என்பதெல்லாம் அறவே கிடையாது .அதை முத்துவும் எதிர்பார்க்க மாட்டான்.

சரி நாம் கூப்பிட்டு வந்திருக்கிறோம் .அவர்களை நாம் கவனித்து அனுப்புவது தான் முறை என்று ஒவ்வொரு முறையும் அவனே எல்லா செலவுகளையும் செய்வான்.அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் மாட்டான்.

ஆனால் மருந்துக்கு கூட அவன் நண்பர்கள் இந்த முறை நான் டிக்கெட் எடுத்துக் கொள்கிறேன் நீ தான் தினமும் எடுக்கிறாய். ஒவ்வொரு படத்திற்கும் ரிலீஸ் ஆகும் போது டிக்கெட் எடுக்கிறாய் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். வந்தவரை லாபம் என்று அத்தனையும் அமுக்கி வைத்துக் கொண்டு தான் படம் பார்த்துவிட்டு வருவார்கள். பொய்யான சிரிப்பை சிரித்து விட்டு, ஒருவேளை மதிய உணவு இடைவேளை மீறி படம் முடிந்தால் மதிய உணவையும் சேர்த்து முத்துவின் தலையில் கட்டி விட்டு செல்வார்கள் .

இப்படியாக முத்துவிற்கு நண்பர்கள் வாய்த்திருந்தார்கள்.

என்ன முத்து எப்பவுமே நீ தான் செலவு பண்ணுற ?மற்ற நண்பர்கள் செலவு செய்ய மாட்டாங்களா ?வாய் திறந்து கேட்க வேண்டியதுதானே? என்று முத்துவிடம் நண்பர்கள் சொன்னால் கூட

வேண்டாம் பாவம் கஷ்டப்படுறவங்க என்று சொல்லி அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான் .

இப்போ உனக்கு தெரியாது ஆனால் இந்த மனுஷங்களோட உண்மையான வேஷம். அத நீ சீக்கிரம் புரிந்து கொள்வாய் .அந்த நாள் கண்டிப்பாக வரும் என்று நண்பர் ஒருவர் சொன்னபோது முத்துவிற்கு அது பெரிதாக தோன்றவில்லை .

ஒரு நாள் வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆனது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய படங்கள் ரிலீஸ் இந்த அந்த ஒரு வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆகும் போது செய்யும் ரிசர்வ்’ இன்று அவனால் செய்ய முடியவில்லை.

அவள் எப்போதும் படத்திற்கு கூப்பிட்டு போகும் கிருஷ்ணாவை கூப்பிட்டான் .

கிருஷ்ணா நீ தியேட்டர் பக்கத்துல இருக்குற என்று கேட்டான்.

ஆமா என்றான் கிருஷ்ணன்.’ என்ன விஷயம் ?டிக்கெட் எதுவும் ரிசர்வ் பண்ணிட்டியா ?படத்துக்கு போகலாமா என்று ஆவலாக கேட்டான் கிருஷ்ணன்.

இல்ல கிருஷ்ணா என்னுடைய மொபைலில் இருந்து ரிசர்வ் பண்ண முடியல. என்னன்னு தெரியல டெக்னிக்ல ஏதோ மிஸ்டேக் ஆயிருக்கு. ஒன்னு பண்ணு நீ தியேட்டருக்கு போய் டிக்கெட் எடுத்தது நான் பின்னாடி வரேன் என்று சொன்னான் முத்து.

கொஞ்சம் கூட தாமதிக்காத கிருஷ்ணா

அய்யய்யோ எனக்கு ஒரு வேலை வந்துருச்சு. அத நான் முடிக்கணும்; நீ படம் பாத்துட்டு வந்துரு ; முத்து அப்புறம் பேசிக்கலாம் என்று சொன்னான் கிருஷ்ணன்.

என்ன இப்பதான் டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருக்கியா? படத்துக்கு போகலாமான்னு கேட்டான்

நான் ரிசர்வ் பண்ணல நீ டிக்கெட் எடுத்து சொன்னாலும் இப்படி பல்டி அடிக்கிறானே.? என்ன உலகமது அந்த நண்பர் சொன்னது உண்மைதான் போல என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் முத்து.

ஆனால் கிருஷ்ணாவுக்கு ஒரு வேலையும் இல்லை வெட்டியும் இல்லை என்பது அவனுக்கு தெரியும்.

பணம் கொடுத்து அவன் கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்து அதை செலவழிக்கும் திறன் அவரிடம் இல்லை என்பதை தெரிந்து கொண்டான்

அப்போதுதான் முத்துவிற்கு அவன் நண்பன் சொன்னது சுரீர் என்று உரைத்தது.

இந்த மனுஷங்களே இப்படித்தான் செய்தது வரைக்கும் நல்லா வாங்கிக்கிருவாங்க .ஒரு நாள் நீ கேட்டு பாரு. அப்பதான் அவங்க உண்மையான நிறம் தெரியும் என்று சொன்னது, ஞாபகத்தில் வந்தது. உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டான் முத்து.

அடுத்த வெள்ளிக்கிழமை படம் ரிலீசானது .அவன் இப்பொழுதெல்லாம் யாரையும் அழைத்துப் போவதில்லை.

நமக்கு எதுக்கு வம்பு ?அவனவன் பணத்த போட்டு படம் பார்க்கட்டும். நமக்கு ஏதும் தலையெழுத்து இல்லையே என்றவன் அவனாக படத்திற்கு போய் திரும்பினான்.

Leave a Reply

Your email address will not be published.