செய்திகள்

டாக்டர் எஸ்.எம்.பாலாஜி மகள் திருமண வரவேற்பு: எடப்பாடி, ஓ.பி.எஸ். வாழ்த்து

சென்னை, மே.17-
பல் மற்றும் முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி –செலின் பாலாஜி ஆகியோரின் மகள் டாக்டர் பத்ம பிரீத்தாவுக்கும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் லெஸ்லி ஜோசப் – மோலி ஜோசப் ஆகியோரின் மகன் டாக்டர் கிறிஸ் ஜோசப்புக்கும் சென்னையில் நேற்று காலை திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாலையில், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு விழா நடந்தது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ப.தனபால், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், உலக பல் மருத்துவர்கள் சம்மேளனத் தலைவர் ஜெராடு சீபெர்கர், இலங்கை வேளாண்மை, நீர்ப்பாசனம், ஊரக பொருளாதாரத்துறை மந்திரி அமீர் அலி, மாலத்தீவு ஜனாதிபதி அலுவலக மந்திரி அகமது நசீம், வெளி விவகாரத்துறை மந்திரி அப்துல்லா சாகித், ராஜாங்க மந்திரி அகமது கலீல், புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், துர்கா ஸ்டாலின், ராஜாத்தியம்மாள், கனிமொழி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், டாக்டர்கள், அதிகாரிகள் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டு மணமக்களை
வாழ்த்தினர்.
திருமண வரவேற்பு விழாவுக்கு வந்தவர்களை டாக்டர் வர்ஷா பாலாஜி வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *