செய்திகள்

ஜூலை 31: தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

சென்னை, ஜூலை 31-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து சவரன் ரூ.36,384க்கு விற்பனையாகிறது

சென்னையில் தங்கம் விலை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் சற்று உயர்ந்து ரூ.36,328 க்கு விற்பனையானது. இதைத்தொடர்ந்து நேற்று தங்கம் விலை மேலும் ரூ.224 அதிகரித்து ரூ. 36,552க்கு விற்பனையானது.

ரூ.168 குறைவு


இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.4,548க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.36,384க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.00 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ,73,000 க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *