செய்திகள்

ஜூன் 07-தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது

சென்னை, ஜூன் 7–

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து சவரன் ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.4,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 67,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.