செய்திகள்

ஜனவரியில் ரூ.1.55 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்

புதுடெல்லி, பிப்.1–-

ஜி.எஸ்.டி. வரி வசூல் குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த மாதத்தில் (ஜனவரி) மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் நேற்று மாலை 5 மணி வரை ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடியாக உள்ளது. இதில் 37 ஆயிரத்து 118 கோடி இறக்குமதி பொருட்கள் மூலம் பெறப்பட்ட வருவாயாகும். செஸ் வரி ரூ.10 ஆயிரத்து 630 கோடியும் உள்ளடங்கியதாகும். நடப்பு நிதியாண்டில் ஜனவரியில், முந்தைய ஆண்டை விட 24 சதவீதம் அதிகமாக ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இந்த நிதியாண்டில் 3 மாதங்களில் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை வசூலான ஜி.எஸ்.டி. வசூல் வரலாற்றில் கடந்த 2022 ஏப்ரலில் வசூலான ரூ.1.68 லட்சம் கோடியே அதிகபட்சமாக இருக்கிறது. இந்த ஜனவரி வசூலானது அதற்கடுத்ததாக 2-வது அதிகபட்சமாக பதிவாகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *