செய்திகள்

சோனாலிகா டிராக்டர் விற்பனை அதிகரிப்பு

சென்னை, ஜூலை 8–

சோனாலிகா டிராக்டர், ஜூன் மாதத்தில் மட்டும் 15 ஆயிரத்து 200 டிராக்டர் விற்றுள்ளது. விற்பனை 55% அதிகரித்துள்ளது. இந்திய மொத்த டிராக்டர் விற்பனையில் 75.4% இடம் பிடித்துள்ளது. ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது என்று இதன் செயல் இயக்குனர் ரமன் மிட்டல் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்திலும் 5% வளர்ச்சி பெற்றுள்ளது. தேக்கக் காலத்திலும் விரிவாக்கம், உற்பத்தியை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றால் வளர்ச்சி பெற்றோம் என்றார்.

நவீன தொழில் நுட்பம், சிறந்த வினியோக வசதி, புதிய கண்டுபிடிப்புகள் விவசாயிகளுக்கு ஏற்ற டிராக்டர்களை உருவாக்கினோம் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *