நல்வாழ்வு
புளிச்ச கீரை (கோங்குரா) :இது பெயருக்கு ஏற்றார்போல புளிப்பு சுவையுள்ளது. இந்தக் கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முதன்மை வகிக்கிறது. நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கீரையைச் சிறிதளவெனும் சமைத்து சாப்பிடக் கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள். இதன் மகத்துவம் தெரிந்துதான் ஆந்திர மக்கள் இந்தக் கீரையை “கோங்குரா சட்னியாக” செய்து தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்தக் கீரையில் தாதுபொருட்களும் இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன. எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்தக் கீரைக்கு உண்டு என்பார்கள். சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்தக் கீரையை சட்டினி செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம் .