செய்திகள்

சொந்த தொழில் புரிபவர்கள் கம்பெனிகளை பதிவு செய்ய வரி, சட்ட ஆலோசனைக்கு புதிய சட்ட உதவி நிறுவனம்

Spread the love

சென்னை, ஆக. 20–

மத்திய அரசின் சுயதொழில் துவங்க ஊக்குவிக்கும் திட்டத்தில் இணைந்து புதிதாக 20 ஆயிரம் நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. இதுபோல புதிய நிறுவனம் துவங்க சட்டப்பூர்வ ஆலோசனை, பதிவு செய்ய உதவுதல், ஜிஎஸ்டி பதிவு செய்ய வழிகாட்டும் வசதிகளை வக்கீல் செர்ச்.காம் நிறுவனம் இலவசமாக செய்கிறது என்று இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹரிகேஷ் டாட்டர் தெரிவித்தார். அவர் கூறுகையில், சுயதொழில் துவங்குவது அதிகரித்து வரும் நிலையில், அந்த நிறுவனங்களுக்கு துவக்க நிலை சட்ட ஆலோசனைகளை இந்நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. 10 ஆயிரம் நிறுவனங்களுக்கு இந்த வசதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வக்கீல் செர்ச். காம் ஆன்லைனில் சட்ட, வரி, விதிமுறை அமல் நிறைவேற்றம் நிறுவனமாக உள்ளது. இத்துடன் கணக்கிடுதல், வரி செலுத்துதல், ஒப்பந்தங்கள், வாடிக்கையாளர் உரிமை போன்ற வசதிகளை வழங்குகிறது. இது பற்றிய அறிய www.vakilsearch.com வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *