கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கோளில் தான் எடுத்த பல செல்பி புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் வெளியிட்டு பெயர் வாங்கியது. இவை, அந்த ரோவரின் பெருமையை காட்டிக்கொள்ளும் விஷயமாக மட்டும் இல்லாமல், ரோவரின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை நாசா குழுவினர் அறிந்துகொள்ளவும் உதவியது. கியூரியாசிட்டியின் சுய புகைப்படங்கள் அனைத்தும், அதன் ‘கைமுனையில்’ இருந்த கருவியான எம்.ஏ.எச்.எல்.ஐ. மூலமாக எடுக்கப்பட்டவை.
கியூரியாசிட்டி கடைசியாக ஒரு செல்பி படத்தை பாறை முகட்டில் (மார்டின் ரிட்ஜ்) இருந்து எடுத்து அனுப்பியது. பின்ன வெரா ரூபி ரிட்ஜ் என்ற அந்த பாறை பகுதியை துளையிட்டு மண் மாதிரிகளை எடுத்து அனுப்பியது. கார் அளவிலான ரோவர், மவுண்ட் ஷார்ப் என்ற ஒரு களிமண் பகுதியை நோக்கி இப்போது இறங்கி வருகிறது. அதற்கு முன் கடந்த ஆண்டு டிசம்பர் 15 ம் தேதி ராக் ஹால் என்று அழைக்கப்படும் ரிட்ஜ் என்ற இடத்தில் தனது 19 வது மண் மாதிரிகளை எடுத்து அனுப்பி இருந்தது.
ஜனவரி 15 ம் தேதி, விண்கலத்தின் கைமுனை லென்ஸ் இமேஜர் (MAHLI) கேமராவில் 57 செல்பி படங்களை எடுத்து அனுப்பியது அது ஒன்றாக தொகுக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள களிமண் தாதுக்கள், மவுண்ட் ஷார்ப் மீது பண்டை காலத்தில் ஏரிகள் இருந்ததற்கான தடயங்களாக இருக்கலாம் எனவும் நாசா கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.