வாழ்வியல்

செயற்கை நுண்ணறிவால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்!

செயற்கை நுண்ணறிவால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, பணிமனையின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற பொதுப்புத்தி நிலவி வரும் சூழலில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால், பணிமனையில் ஆக்கப்பூர்வமான தாக்கம் ஏற்படும் எனவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.

உலகளவில் 120 தொழிலதிபர்களின் உள்ளீடுகளைக் கொண்டு டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவால் மனிதனின் சிந்தனை பல்வகைப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற தொழிலதிபர்களில் 90 விழுக்காட்டினர், அறிவாற்றலில் பன்முகத்தன்மை இருப்பது நிர்வாகத்துக்கு அவசியம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், ஊழியர்களுக்கு புதிய பதவிகளை உருவாக்குவதற்குச் செயற்கை நுண்ணறிவு பயன்படும் என்று 75 விழுக்காட்டினர் எதிர்பார்க்கின்றனர். தீர்மானங்களை உருவாக்குவதைச் செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தும் என்று 93 விழுக்காட்டினர் நம்புகின்றனர்.

இதுகுறித்து டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி வினோத் குமார் கூறும்போது, “சில பணிகளைச் செயற்கை நுண்ணறிவு கைப்பற்றும் என்றாலும், அந்தத் தொழில்நுட்பத்தால் புதிய வழிகளில் பணிகளை மேற்கொள்ள முடியும். நிறுவனங்களும், தனிநபர்களும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்கு செயற்கை நுண்ணறிவு உதவிபுரியும். இது மனிதனுக்கும், இயந்திரத்துக்கும் இடையேயான போட்டியல்ல. மனிதனும், இயந்திரமும் இணைந்து பணியாற்றுவதே செயற்கை நுண்ணறிவாகும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *