செய்திகள்

செம்பாக்கத்தில் பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து மாவட்ட மாணவரணி செயலாளர் சாந்தகுமார் வாக்கு சேகரிப்பு

காஞ்சீபுரம், ஏப்.10-

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற பாமக வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளரும். முன்னாள் நகரமன்ற தலைவருமான செம்பாக்கம் ஜி.எம்.சாந்தகுமார் செம்பாக்கம் நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு, விஜபி சீனிவாச நகர், காந்தி நகர் உள்பட அனைத்து தெருக்களில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வாக்காளர்களை சந்தித்து, கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தார்.

அப்போது அவர், பாமக வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கத்திற்கு நீங்கள் வாக்களித்து லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனே வீட்டில் இருந்த பெண்கள் எங்கள் ஓட்டு பாமக வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கத்தின் மாம்பழம் சின்னத்திற்கே என்று கூறினர்.

அவருடன் நகர செயலாளர் எஸ்.ஏ.விஜயராகவன், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் மணவாளன், மாவட்ட கழக இணைச் செயலாளர் ஆரோக்கியராணி, எம்.ஜி.எல் சுரேஷ், உள்பட திரளானோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *