செய்திகள்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் முழு உருவச்சிலை: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தொல். திருமாவளவன் வழங்கிய சிலை

சென்னை, அக்.27–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27–ந் தேதி) சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனால் வழங்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனால் 14.4.2022 அன்று டாக்டர் அம்பேத்கரின் 132–வது பிறந்த நாளன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலை நிறுவுவதற்காக வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் 14.5.2022 அன்று அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அச்சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

துரைமுருகன், நேரு…

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ்,

சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், ஆர். கிரிராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, த.வேலு, சிந்தனைச் செல்வன், செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி, எம். பாபு, ஜெ. முகம்மது ஷா நவாஸ், துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *