செய்திகள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15 நாட்களில் 93 ஆயிரம் மாணவர்கள் சேர்ப்பு

சென்னை, ஜூலை.4-

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15 நாட்களில் 93 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் கடந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலமாகவே வகுப்புகள் நடந்து முடிந்தது. நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளும் அதேபோல் நடைபெற்று வருகின்றன. புதிய கல்வியாண்டில் மாணவ, -மாணவிகள் சேர்க்கையும் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலர் வேலையிழந்து, அதனால் வாழ்வாதார பாதித்து, அவர்களுடைய குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்க தொடங்கி இருக்கின்றனர். அரசு பள்ளிகளில் கடந்த மாதம் 14-ந்தேதியில் இருந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் 15 நாட்களில் 93 ஆயிரத்து 445 மாணவ-மாணவிகள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்து இருப்பதாகவும், இதில் தனியார் பள்ளிகளில் இருந்து மட்டும் மாநகராட்சி பள்ளிகளில் 12 ஆயிரத்து 471 பேர் சேர்ந்துள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை மாநகராட்சி பள்ளிகளில் டிசம்பர் மாதம் வரை நடைபெற்றதாகவும், அப்போது 90 ஆயிரம் மாணவ-மாணவிகள் தான் சேர்ந்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகளவில் மாணவர் சேர்க்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *