செய்திகள்

சென்னை ஐகோர்ட்டில் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பு

சென்னை, மார்ச் 6–

சென்னை ஐகோர்ட்டில் 5 கூடுதல் நீதிபதிகள், நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்களாக இருந்து வந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோரை சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி 2021ம் ஆண்டு அக்டோபர் 20ந்தேதி எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜய குமார், முகமது ஷபிக் ஆகியோருக்கும், அக்டோபர் 28ந்தேதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தும் கூடுதல் நீதிபதிகளாக அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் பரிந்துரையை ஏற்று, கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்துவரும் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி 5 கூடுதல் நீதிபதிகளும், நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *