சென்னை, ஏப். 28–
சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் உள்ள ஐ.ஐ.டியில் கடந்த 19-ந்தேதி 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என 7 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. நேற்று வரை 4974 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐ.ஐ.டி.யில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக இருந்தது. இன்று மேலும் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்த பாதிப்பு 171 ஆக உயர்ந்துள்ளது.