செய்திகள்

சென்னையில் 42,532 காய்ச்சல் முகாம்: பரிசோதனை செய்த 24 லட்சம் பேரில் 22,873 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை, செப்.14-

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 42 ஆயிரத்து 532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 24 லட்சத்து 40 ஆயிரத்து 209 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 477 பேருக்கு காய்ச்சல், சளி அறிகுறி இருந்தது.

இதையடுத்து அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில் 22 ஆயிரத்து 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *