செய்திகள்

சென்னையில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி வேட்டை

சென்னை, மார்ச் . 18 –

சென்னையில் கட்டுக்கட்டாக ஒரு கோடி ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி வேட்டை நடத்தி பறிமுதல் செய்தனர்.

சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இன்று காலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த ஒரு வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம்

ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் இருந்தது. விசாரணையில் அடையாறு தனியார் வங்கிலிருந்து திருப்பெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை ஏடிஎம் யந்திரங்களில் வைக்க எடுத்துச்சென்றதாக தெரிய வந்தது.

இருந்தாலும் அப்பணம் கொண்டு செல்லத் தகுந்த ஆவணம் இல்லாததால் அப்பணத்தை பறிமுதல் செய்து பூந்தமல்லி தாசில்தார் அலுவகத்தில் உள்ள கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தினர். வேனில் இருந்த வங்கி ஊழியர் விஜயகாந்த், டிரைவர் அன்பு , மேலும் 2 பாதுகாவலர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *