செய்திகள்

சென்னையிலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீர் எந்திரக் கோளாறு: 175 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சென்னை, ஜூலை 28–

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட இருந்த விமானத்தில் திடீர் எந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 175 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல விமானம் தயாராக இருந்தது. இதற்காக 169 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

இந்நிலையில், விமானத்தின் தலைமை விமானி, விமானத்தில் எந்திரங்களை சரி பார்த்தார்.

அப்போது விமானத்தின் எந்திரங்களில் பெரிய அளவிலான பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

என்ஜீனியர்கள் வந்து விமான எந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டது.

விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை சரியான நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 169 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 175 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Leave a Reply

Your email address will not be published.